‘மாஸ்க்’ படத்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.. குவியும் பாராட்டுகள்

‘மாஸ்க்’ படத்தை அட்டகாசமான பொழுதுபோக்கு படம் என அனைவரும் பாராட்டுகிறார்கள்.;

Update:2025-11-27 03:00 IST

சென்னை,

பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ், தி ஷோ மஸ்ட் கோ ஆன் நிறுவனங்கள் சார்பில் ஆண்ட்ரியா, எஸ்.பி.சொக்கலிங்கம் தயாரித்து, விகர்ணன் அசோக் எழுதி இயக்கியுள்ள புதிய படம், 'மாஸ்க்'. கவின், ஆண்ட்ரியா, ருஹானி சர்மா, சார்லி, பாலசரவணன், அர்ச்சனா சாந்தோக், ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன், சுப்ரமணியம் சிவா உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜ சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த வாரம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் 'மாஸ்க்' படம் குறித்து இயக்குனர் விகர்ணன் அசோக் கூறியதாவது:- தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட இருந்த ரூ.440 கோடி காணாமல் போகிறது. இந்த கொள்ளை பின்னணியில் கவின், ஆண்ட்ரியா இடையே அரங்கேறும் ஆடு புலி ஆட்டமே 'மாஸ்க்' படத்தின் கதை. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே 'மாஸ்க்' படம் கடந்த வாரம் வெளியானது. நடிகர் நடிகைகளின் சிறப்பான நடிப்பு, படக்குழுவினரின் உழைப்பு, படம் ரிலீசுக்கு முன்பாகவே எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. அந்த எதிர்பார்ப்பு இரட்டிப்பாகவே நிறைவேறி இருக்கிறது.

'மாஸ்க்' படம் இன்றைக்கு வெற்றிப்படமாக மாறியுள்ளது. திரையிட்ட இடங்களிலெல்லாம் ரசிகர்களின் வரவேற்பு மிகுதியாகவே இருக்கிறது. ரிப்பீட் ஆடியன்ஸ் வருகையும் அதிகரித்துள்ளது. 'அட்டகாசமான பொழுதுபோக்கு படம்' என அனைவரும் பாராட்டுகிறார்கள். விமர்சகர்களும் தரமான விமர்சனங்களை கொடுத்துள்ளனர். குறிப்பாக கவின், ஆண்ட்ரியா நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதர நடிகர், நடிகைகளும் சிறந்த பங்களிப்பை தந்துள்ளதாகவே பாராட்டுகிறார்கள்.

நல்ல கதை தோற்காது என்பது எங்கள் படத்திலும் நிரூபணம் ஆகியுள்ளது. அரங்கம் நிறைந்த காட்சிகளாய் 'மாஸ்க்' படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த மாபெரும் வெற்றியை பரிசளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், படம் பார்க்காத ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்த்து ஆதரவு தரவும் வேண்டுகிறோம் என்று இயக்குனர் வி.கர்ணன் அசோக் தெரிவித்தார்.


 


Tags:    

மேலும் செய்திகள்