சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடிகர் ஜெயராம் சாமி தரிசனம்
தமிழில் நடிகர் தனுஷுடன் ஒரு படத்தில் நடித்து வருவதாக ஜெயராம் தெரிவித்தார்.;
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நடிகர் ஜெயராம் தனது மனைவியுடன் இன்று வருகை தந்தார். அவர்களுக்கு கோவில் தீட்சிதர்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து கோவிலில் ஜெயராம் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் இருவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் ஜெயராமுடன் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது தமிழில் நடிகர் தனுஷ் உடன் நடித்து வருவதாகவும், நடிகை ஊர்வசியுடன் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.