பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலாவுக்கு கலாசார விருது வழங்கிய ரஜினிகாந்த்

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.;

Update:2025-11-27 02:13 IST

சென்னை,

தமிழ் நாடக ஆசிரியர் ஒய்.ஜி.பார்த்தசாரதியின் மனைவியும், கல்வியாளருமான மறைந்த ராஜலட்சுமி நூற்றாண்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. ஒய்.ஜி.பார்த்தசாரதி - ராஜலட்சுமி தம்பதியரின் மகனும், நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன் - சுதா, பேத்தி மதுவந்தி ஏற்பாட்டில் விழா நடந்தது.

சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலாவுக்கு, கலாசார விருதை வழங்கி கவுரவித்தார்.

வேல்ஸ் கல்வி குழும நிறுவனர் ஐசரி கணேஷ், ரஜினிகாந்தின் மனைவி லதா, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், பரதநாட்டிய கலைஞர்கள் பத்மா சுப்பிரமணியன், ஷோபனா, பாடகி நித்யஸ்ரீ மகாதேவன், வயலின் இசைக்கலைஞர் லால்குடி கிருஷ்ணன், தொழில் அதிபர் ரவி வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்