வி.ஜே.சித்துவின் ‘டயங்கரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
‘டயங்கரம்’ படத்துக்கு சித்து குமார் இசையமைக்கிறார்.;
பிரபல யூடியூபரான வி.ஜே.சித்து இயக்கி நடித்து வரும் திரைப்படம் ‘டயங்கரம்’. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்ப்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தில் நட்டி, காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சித்து குமார் இசையமைக்கும் இந்த படத்துக்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'டயங்கரம்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
காமெடி, எமோஷன் உள்ளிட்டவை கலந்த கதையாக உருவாகி வரும் இந்த படத்தை ஜூன் மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.