வடபழனி முருகன் கோவிலில் நடிகர் ஜீவா சாமி தரிசனம்

ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது;

Update:2026-01-15 14:35 IST

'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி', 'கற்றது தமிழ்', 'கோ', 'ரவுத்திரம்', 'கலகலப்பு 2' போன்ற பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார்.

ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், பொங்கல் திருநாளான இன்று நடிகர் ஜீவா சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்