என்னை பொறுத்தவரை கவர்ச்சி காட்டுவது அவரவர் விருப்பம்- ரகுல் பிரீத் சிங்

திருமணத்துக்கு பிறகும் படங்கள் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், கவர்ச்சியிலும் கவனம் ஈர்த்து வருகிறார்.;

Update:2025-11-25 23:33 IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான ரகுல் பிரீத் சிங், இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் படங்கள் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், கவர்ச்சியிலும் கவனம் ஈர்த்து வருகிறார். இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரகுல் பிரீத் சிங்கிடம், ‘திருமணத்துக்கு பிறகும் கவர்ச்சி படங்களை வெளியிடுகிறீர்களே?', என்று கேட்கப்பட்டது.

இதற்கு அவர் பதிலளிக்கையில், “பொதுவாக திருமணத்துக்கு பிறகு நடிகைகள் அவ்வளவு தான் என்ற எண்ணம் இருக்கிறது. அது தவறு. என் விஷயத்தில் என்ன அப்படியா நடக்கிறது? என் உள் உணர்வுகளை என் உறவுகள் புரிந்து கொள்கிறார்கள்.

என்னை பொறுத்தவரை கவர்ச்சி காட்டுவது அவரவர் விருப்பம். அந்த எல்லைகளை திருமணம் தடுக்கவோ, குறைக்கவோ முடியாது. நடிகைகளின் பயணத்தில் திருமணம் தடைக்கல் அல்ல, அது ஒரு ஊக்கம் தரும் ஏணிப்படிகளே'', என்று கூறி சிரித்தார்.

ரகுல் பிரீத் சிங் தற்போது ‘இந்தியன்-3' மற்றும் இந்தியில் 2 படங்கள் நடித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்