ஹரிஷ் கல்யாணின் 15வது படத்தின் டைட்டில் புரோமா வெளியீடு

ஹரிஷ் கல்யாணின் ‘தாஷமக்கான்’ படத்தை ‘லிப்ட்’ பட இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்குகிறார்.;

Update:2025-11-22 17:25 IST

சென்னை,

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் பின் படிப்படியாக படங்களில் நடிக்க தொடங்கி தற்போது பிரபல நடிகராக வலம் வருகிறார் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் வெளியான ‘பார்க்கிங்’ மற்றும் ‘லப்பர் பந்து’ திரைப்படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

‘லிப்ட்’ பட இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் தனது 15வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் நாயகனாக ஹரிஷ் கல்யாணும் நாயகியாக பிரீத்தி முகுந்தனும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. திங்க் ஸ்டுடியோஸ், இடா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

Advertising
Advertising

இந்நிலையில், ‘தாஷமக்கான்’ படத்தின் டைட்டில் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்