’நான் அப்படி இருக்கும்போதுதான் அழகாக இருந்ததாக பலர் சொன்னார்கள்’ - கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தற்போது ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தில் நடித்துள்ளார்.;

Update:2025-11-22 13:33 IST

சென்னை,

நடிகை கீர்த்தி சுரேஷ் சந்துரு இயக்கத்தில் ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இப்படம் வருகிற 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது.

தற்போது ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்று வருகிறார். இதற்கிடையில், ஒரு நேர்காணலில் பேசிய அவர், குண்டாக இருக்கும்போது தான் அழகாக இருந்ததாக பலர் கூறியதாக தெரிவித்தார். அவர் பேசுகையில்,

"நான் குண்டாக இருந்தபோது மிகவும் அழகாக இருந்தேன் என்று பலர் கூறுகிறார்கள். அந்த நேரத்தில், நான் 10 தோசைகள்,10 இட்லிகள் சாப்பிட்டேன். இப்போது எனக்கு எந்த உணவுக் கட்டுப்பாடும் இல்லை. ஆனால் நான் உடற்பயிற்சி செய்கிறேன்.

10-12 மாதங்களில் சுமார் 10 கிலோ எடையைக் குறைத்துள்ளேன். நடிப்புடன் ஆரோக்கியத்தையும் பராமரிப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். 4 ஆண்டுகளுக்கு முன்புதான் நான் என் சருமத்தை கவனித்துக் கொள்ள ஆரம்பித்தேன். இதெல்லாம் 'மகாநதி'க்குப் பிறகுதான் தொடங்கியது," என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்