அடுத்து காதல் படம்...'ஹிட் 3' இயக்குனர் கொடுத்த அப்டேட்
’ஹிட் 3’ படம் வருகிற 1-ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.;
சென்னை,
ஆக்சன் திரில்லர் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் சைலேஷ் கோலானு. இவரது இயக்கத்தில் தற்போது நானி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் 'ஹிட் 3'.
அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற 1-ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், விரைவில் காதல் படம் இயக்க உள்ளதாக சைலேஷ் அப்டேட் கொடுத்திருக்கிறார். சமீபத்தில், ஒரு ரசிகர் இன்ஸ்டாகிராமில் 'ஹிட் 2' படத்தில் இருந்து அதிவி சேஷும் மீனாட்சி சவுத்ரியும் இருக்கும் ஒரு வீடியோவை பகிர்ந்து இயக்குனர் சைலேஷிடமிருந்து ஒரு காதல் கதையை எதிர்பார்க்க முடியுமா? என்று கேட்டார்.
அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த சைலேஷ், "நிச்சயமாக… மிக விரைவில்" என்று பதிலளித்தார்.