தமிழ்ப்படங்களின் வசூலை பதம் பார்த்த ஹாலிவுட் படங்கள்
எப்-1, ஜுராசிக் வேர்ல்ட் - ரீபர்த், சூப்பர்மேன் ஆகிய திரைப்படங்கள் தமிழ்நாட்டில் நல்ல வசூல் பெற்றுள்ளது.;
தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. அதில் 'பறந்து போ', '3 பி.எச்.கே.', 'லவ் மேரேஜ்', 'டி.என்.ஏ.' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி படங்களாக மாறியுள்ளன. அதேவேளை வெற்றி பெற்ற படங்களின் வழக்கமான வசூலை பெறவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. காரணம், நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக இருந்தாலும், அதன் வசூலை ஹாலிவுட் படங்கள் அள்ளிக்கொண்டது தான் என்கிறார்கள் திரையுலகினர்.
அந்தவகையில் 'எப்-1', 'ஜுராசிக் வேர்ல்ட் - ரீபர்த்', 'சூப்பர்மேன்' ஆகிய திரைப்படங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நல்ல வசூல் பார்த்துள்ளன. இதில் கடந்த மாதம் வெளியான 'எப்-1' படம் இந்தியாவில் ரூ.66 கோடியும், கடந்த வாரம் திரைக்கு வந்த 'ஜுராசிக் வேர்ல்ட் - ரீபர்த்' படம் இதுவரை ரூ.68 கோடியும், கடந்த 10-ந் தேதி வெளியான 'சூப்பர்மேன்' ரூ.18 கோடியும் வசூல் செய்துள்ளது.
வருகிற 24-ந் தேதி பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'பெண்டாஸ்டிக் போர்' திரைப்படம் வெளிவரவுள்ளது.
தொடர்ச்சியான ஹாலிவுட் படங்களின் திரையிடல் சத்தமே இல்லாமல் தமிழ் படங்களின் வசூலை பாதித்து வருவதாக, திரையுலகினர் கவலை தெரிவிக்கிறார்கள்.