நடிகை சவுந்தர்யா மரணத்தில் மோகன்பாபுவுக்கு தொடர்பா? கணவர் ரகு மறுப்பு

நடிகை சவுந்தர்யாவின் மரணத்தில் நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பிருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து ரகு விளக்கம் அளித்துள்ளார்.;

Update:2025-03-13 01:15 IST

ஐதராபாத்,

தென்னிந்திய சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சவுந்தர்யா. இவர் கார்த்திக் நடித்த பொன்னுமணி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்டோருடன் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில், சவுந்தர்யாவின் மரணம் விபத்தல்ல என்று ஆந்திராவை சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளித்திருக்கிரார். அந்த மனுவில், 'நடிகை சவுந்தர்யாவின் மரணம் விபத்தல்ல. சவுந்தர்யாவுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை, நடிகர் மோகன்பாபு கேட்டதாகவும், அதனைக் கொடுக்க மறுத்ததால்தான், திட்டமிட்டு ஹெலிகாப்டர் விபத்து போல ஏற்படுத்தி சவுந்தர்யா மற்றும் அவரது சகோதரரைக் கொன்றதாக அதில் தெரிவித்துள்ளார்.

நடிகை சவுந்தர்யா மரணத்தில் நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பிருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து அவரது கணவர் ரகு விளக்கம் அளித்துள்ளார். நடிகர் மோகன் பாபுவும் தங்களது குடும்பத்தினரும் நெருங்கிய நட்புறவுடன் பழகி வருவதாகவும் சவுந்தர்யாவின் மரணத்தில் மோகன் பாபுவுக்கு எந்த தொடர்பும் இல்லை. எனது மனைவி மரணம் மற்றும் மோகன்பாபு தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவதை உடனே நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்