'வாடிவாசல்' படம் தள்ளிப்போக இதுதான் காரணமா?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த படம் 'வாடிவாசல்'.;

Update:2025-06-30 07:13 IST

சென்னை,

சூர்யாவின் 'வாடிவாசல்' படம் தள்ளிப்போவதற்கான காரணம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த படம் 'வாடிவாசல்'.

இப்படத்திற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க இருந்தது. இதற்கிடையில், சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கத்தில் புதிய படத்திலும், வெற்றி மாறன், சிம்புவுடன் ஒரு புதிய படத்திலும் பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக, 'வாடி வாசல்' கைவிடப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்தது. வாடிவாசல் ஸ்கிரிப்டை வெற்றிமாறன் இன்னும் முடிக்காததே படம் தள்ளிப்போக காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சூர்யாவும் வெற்றி மாறனும் இன்னும் பேச்சுவார்த்தையில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முழு கதையும் தயாராக இருந்தால் மட்டுமே 'வாடி வாசல்' படத்தில் நடிக்க முடியும் என்று சூர்யா கூறியதாகத் தெரிகிறது. சூரியாவின் கோரிக்கைக்கு வெற்றி மாறனும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனால் வெற்றிமாறன், வாடிவாசல் படத்தின் முழு கதையையும் முடிந்த பின்னரே படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழு ஸ்கிரிப்ட்டும் தெரியாமல் சூர்யா, இயக்குனர் பாலாவுடன் இணைந்து ஒரு படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்