கமலின் 237-வது படம்: அப்டேட் கொடுத்த இயக்குனர்

கமலின் 237-வது படத்தை அன்பறிவ் சகோதரர்கள் இயக்குகிறார்கள்.;

Update:2025-05-26 09:24 IST

சென்னை,

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். இவர் தனது 234-வது படமான 'தக் லைப்' படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில், நேற்று முன்தினம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், கமலின் 237-வது படத்தை இயக்கும் அன்பறிவ் சகோதரர்கள் கலந்துகொண்டனர். அப்போது அவர் பேசுகையில்,

'முதல் படமே கமல்ஹாசன் சாருடன் என்பது கண்டிப்பாக எங்களுக்கு மிகவும் ஆச்சரியமான விஷயம். கமல் சார் போன்ற ஒரு நட்சத்திர நடிகருக்கு எந்த மாதிரி படம் பண்ணலாம் என்பதுபோன்று நிறைய யோசித்தோம். எல்லாத்தையும் ரெடி பண்ணிவிட்டு சாரிடம் போய் பேசும்போது தம்பி எல்லாத்தையும் நான் பாத்துக்கொள்கிறேன் என்றார்.

நாங்கள் எதுவுமே திட்டமிடவில்லை. கமல் சார்தான் திட்டமிட்டது. மொத்த பொறுப்பையும் சாரே ஏற்றுக்கொண்டார். அந்த திட்டத்தை செயல்படுத்த நாங்கள் தீவிரமாக உள்ளோம்' என்றார்

Tags:    

மேலும் செய்திகள்