''கூலி' எல்சியுவின் கீழ் வராது'' - மீண்டும் உறுதிப்படுத்திய லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடித்திருக்கும் ''கூலி'' படத்தை இயக்கி இருக்கிறார்.;

Update:2025-07-25 08:36 IST

சென்னை,

ரஜினிகாந்தின் ''கூலி'' படம் தனது சினிமாட்டிக் யூனிவெர்ஸான எல்.சி.யுவின் கீழ் வராது என்று லோகேஷ் கனகராஜ் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இந்திய அளவில் பிரபலமடைந்திருக்கும் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடித்திருக்கும் ''கூலி'' படத்தை இயக்கி இருக்கிறார்.

இது லோகேஷ் கனகராஜின் எல்.சி.யுவின்  கீழ் உருவாவதாகவும், கமல்ஹாசன் ஒரு சிறப்பு வேடத்தில் தோன்றுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், கூலி ஒரு தனித்த படம் என்றும், எல்.சி.யுவிற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெளிவுப்படுத்தினார்.

அவர் கூறுகையில், "கமல் சாரை கூலிக்குள் கொண்டுவர நான் விரும்பவில்லை, ரஜினி சாரை விக்ரமுக்குள் கொண்டுவரவும் விரும்பவில்லை. கூலி என்பது ரஜினி சாருக்காகவே பிரத்யேகமாக எழுதப்பட்ட ஒரு தனித்துவமான படம்" என்றார். கூலி படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்