கயாடு லோஹரின் ’பங்கி’...முதல் பாடல் புரோமோ வெளியீடு

'பங்கி' படம் பிப்ரவரி 13-ம் தேதி வெளியாக உள்ளது;

Update:2025-12-22 19:02 IST

சென்னை,

"பங்கி" என்ற புதிய நகைச்சுவைப் படத்திற்காக, நடிகர் விஸ்வக்சென்னுடன் நடிகை கயாடு லோஹர் இணைந்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இந்தப் படத்தில், விஷ்வக்சென் ஒரு திரைப்பட இயக்குனராக ஒரு புதிய வேடத்தில் நடிக்கிறார், அதே நேரத்தில் கயாடு லோஹர் ஒரு நடிகையாக நடிக்கிறார். பீம்ஸ் செசிரோலியோ இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இயக்குனர் கே.வி. அனுதீப் இயக்கும் 'பங்கி' படத்தை கோடை விருந்தாக ஏப்ரல் 3-ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால், பின்னர் படம் பிப்ரவரி 13-ம் தேதியே உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ’தீரே தீரே’ புரோமோ வெளியாகி இருக்கிறது. முழு பாடல் வருகிற 24-ம் தேதி வெளியாகிறது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்