ஆஸ்கர் போட்டியில் 'மகாவதார் நரசிம்மா'
சிறந்த அனிமேஷன் படப் பிரிவில் “மகாவதார் நரசிம்மா“ படம் இடம்பிடித்துள்ளது.;
சென்னை,
புராண அனிமேஷன் திரைப்படமான 'மகாவதார் நரசிம்மா', 98வது அகாடமி விருதுகளில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் பந்தயத்தில் நுழைந்துள்ளது. 2026ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் சிறந்த அனிமேஷன் திரைப்படப் பிரிவில் பரிசீலனையில் உள்ள 35 அனிமேஷன் திரைப்படங்களின் பட்டியலை அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் வெளியிட்டுள்ளது.
'கே-பாப் டெமான் ஹன்டர்', 'ஜூடோபியா 2' மற்றும் 'டெமான் ஸ்லேயர்: கிமெட்சு நோ யாய்பா இன்பினிட்டி கேஸில்' போன்ற மிகப் பெரிய வெற்றிப் படங்களுடன் மகாவதார் நரசிம்மா போட்டியிட உள்ளது.
அஸ்வின் குமார் இயக்கி, ஷில்பா தவான் ஹோம்பாலே பிலிம்ஸ் பேனரின் கீழ் தயாரித்துள்ள மகாவதார் நரசிம்மா, விஷ்ணுவின் பாதி மனிதன், பாதி சிங்க அவதாரமான நரசிம்மரின் கதையைப் பின்பற்றுகிறது. விஷ்ணுவின் பத்து அவதாரங்களை அடிப்படையாகக் கொண்ட, திட்டமிடப்பட்ட ஏழு பாகங்கள் கொண்ட மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் பாகம் இந்த அனிமேஷன் திரைப்படம். இந்தத் திரைப்படம் தற்போது நெட்பிக்ஸில் ஸ்டிரீமிங் ஆகி வருகிறது.