"கொம்புசீவி" படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் 'கொம்புசீவி' என்ற படத்தில் சண்முக பாண்டியன் நடித்து முடித்துள்ளார்.;

Update:2025-07-03 09:44 IST

சென்னை,

மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் சமீபத்தில் 'படை தலைவன்' படம் வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் 'கொம்புசீவி' என்ற படத்தில் சண்முக பாண்டியன் நடித்து முடித்துள்ளார். இதில் சரத்குமார், தார்னிகா, காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொன்ராம் இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படம் 1996 -ல் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தன.

தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டார் நிறுவனம் கொம்புசீவி படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் படம் விரைவில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்