'வாழை' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
'வாழை' படம் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.;
சென்னை,
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வாழை'. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இப்படம் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் , வாழை படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் வரும் நாட்களில் மக்களின் ஆதரவை இன்னும் அதிகமாக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.