தனது கெரியரில் முதல் முறையாக அதை செய்த ஸ்ரீலீலா
ஸ்ரீலீலா தற்போது மாஸ் ஜதாரா படத்தில் நடித்துள்ளார்.;
சென்னை,
ரவி தேஜா மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் படமான மாஸ் ஜதாரா, வருகிற 31-ம் தேதி வெளியாக உள்ளது. பானு போகவரபு இப்படத்தை இயக்கி உள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீலீலா தனது கெரியரில் முதல் முறையாக தனக்காக டப்பிங் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது அவர் அதற்கு பார்வையாளர்கள் எவ்வாறு ரியாக்ட் செய்யப்போகிறார்கள் என்பதைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் ராஜேந்திர பிரசாத், நிதிஷ் நிர்மல், கிருஷ்ண குமார் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர், பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்திருக்கிறார்.