என் திரை​வாழ்​வில் புதிய முயற்சி - நடிகர் பாபி சிம்ஹா

மெஹர் யாரமதி இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது.;

Update:2025-12-18 21:17 IST

பாபி சிம்ஹாவின் 25வது திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. யுவா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தெலுங்கு நடிகை ஹெபா படேல் ஹீரோயினாக நடிக்கிறார். மெஹர் யாரமதி இயக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது.

இப்படத்தில் தனிகெல்லா பரணி மற்றும் சூர்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளராக சித்தார்த்த சதாசிவுனி, கலை இயக்குநராக விவேக் அண்ணாமலை ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.இன்​னும் பெயரிடப்​ப​டாத இப்​படத்​துக்கு ஜே.கிருஷ்ணா தாஸ் ஒளிப்​ப​திவு செய்கிறார்.

நடிகர் பாபி சிம்ஹா பேசும்​போது, “தெலுங்​கில் நேரடி​யாக ஒரு படத்​தில் நாயக​னாக நடிக்க வேண்​டும் என்று நினைத்​த​போது பல கதைகளைக் கேட்டேன். ஒரு நல்ல கதைக்​காகக் காத்​திருந்த நேரத்​தில் யுவா எனக்கு அழைப்பு கொடுத்​தார். கதையைக் கேட்டதும் மிக​வும் பிடித்​தது. இது, நடிக​னாக எனக்​குச் சவாலான கதை. உடனடி​யாக ஒப்புக்கொண்​டேன். என் திரை வாழ்க்​கை​யில் இது புதிய முயற்​சி. வரும் 22ந் தேதி முதல் விசாகப்​பட்​டினத்​தில் படப்​பிடிப்​பு தொடங்​கு​கிறது” என்​றார்​.

Tags:    

மேலும் செய்திகள்