நாளை தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் (19.12.2025)

நாளை எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.;

Update:2025-12-18 19:31 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் குறிப்பாக நாளை திரையரங்குகளில் எந்தெந்த படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

1 கொம்புசீவி

பொன்ராம் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் ‘கொம்புசீவி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் 1996 -ல் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2 அவதார் பயர் அண்ட் ஆஷ்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'அவதார் பயர் அண்ட் ஆஷ்'.  அவதார் படத்தின் மூன்றாம் பாகமாக இது உருவாகியுள்ளது. இப்படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

3 சாயாவனம்

நடிகர் சவுந்தரராஜா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் ‘சாயாவனம்’. மலையாள இயக்குநர் அனில் இயக்கத்தில் தேவானந்தா, அப்புக்குட்டி, சந்தோஷ் தாமோதரன், தேவானந்தா ஷாஜிலால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மழைக்காட்டில் பெண் ஒருவர் சிக்கிக்கொண்டு அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்பதே இப்படத்தின் திரில்லர் கதைக்களம். சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற இப்படம், நாளை தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்