ஸ்ரீலீலாவின் ’மாஸ் ஜதாரா’ பட டிரெய்லர் வெளியீடு...திரைக்கு வருவது எப்போது?
இந்தப் படத்தை பானு போகவரபுடி இயக்கி இருக்கிறார்.;
சென்னை,
தெலுங்கில் அடுத்து வெளியாக இருக்கும் பெரிய படம் மாஸ் ஜதாரா. ரவி தேஜா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை பானு போகவரபுடி இயக்கி இருக்கிறார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இந்தப் படம் வருகிற 31-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இந்த படத்தை தயாரித்துள்ளனர். பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்திருக்கிறார்.