'அந்த பட தோல்வியால் 1 வருடம் வீட்டிற்குள்ளேயே இருந்தேன்' - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி

பாலிவுட் நடிகர் மிமோ சக்ரவர்த்தி, ’ஜிம்மி’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.;

Update:2025-04-08 12:39 IST

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் மிமோ சக்ரவர்த்தி. இவர் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ஜிம்மி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், 'ஜிம்மி' பட தோல்வியால் 1 வருடம் வீட்டைற்குள்ளேயே இருந்ததாக மிமோ சக்ரவர்த்தி கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

"சல்மான் கானின் 'பார்ட்னர்' படத்தை பார்க்க நான் என் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்றிருந்தேன். அங்கு நான் நடித்த முதல் படமான 'ஜிம்மி'யின் டீசர் திரையிடப்பட்டது. அப்போது 5 வினாடிகள் அமைதியாக இருந்த மக்கள் அதற்கு பிறகு கைதட்டத் தொடங்கினர்.

என் நடனத்தைப் பார்த்து விசில் அடிக்கவும் ஆடவும் தொடங்கினர். நான் ஒரு நட்சத்திரமாகிவிட்டேன் என்று நினைத்தேன். ஆனால், படம் வெளியான பிறகு, எல்லாமே மாறிவிட்டது. என் வாழ்க்கை முடிந்துவிட்டதைபோல உணர்ந்தேன். இதனால், நான் ஒரு வருடம் வீட்டை விட்டு வெளியே வரவில்லை, "என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்