பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்

சோனு சூட் நடிக்க உள்ள புதிய படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார்.;

Update:2025-08-07 07:56 IST

பிரபல இசையமைப்பாளரான சாம் சி.எஸ் 'ஓர் இரவு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர், விக்ரம் வேதா, அடங்கமறு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி போன்ற படங்களுக்கு இசையமைத்து பலரின் கவனத்தை ஈர்த்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில், பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் முதல் முறையா பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். அதாவது, சோனு சூட் நடிக்க உள்ள புதிய படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். ஏற்கனவே இவர் பின்னணி இசையில் வெளியான இந்தி திரைப்படமான விக்ரம் வேதா பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுது குறிப்பிடத்தக்கது.



 


Tags:    

மேலும் செய்திகள்