ஜனநாயகனுடன் மோதும் பராசக்தி
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது.;
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம்,‘பராசக்தி’. இது சிவகார்த்திகேயனின் 25வது படம். ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். 1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தில் 60களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட கார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக்கால அத்தியாவசிய பொருட்களை வைத்து, பராசக்தி பட உலகை செட் மூலம் உயிர்ப்பித்துள்ளனர் படக்குழுவினர். பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பராசக்தி பட உலகம் ஒரு கண்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி வரும் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் குடும்பத்தினர் ‘பராசக்தியின் உலகம்’ கண்காட்சிக்கு வந்து பார்வையிட்டனர்.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்திற்கு போட்டியாக ‘பராசக்தி’ ரிலீஸ் தேதியை ஜனவரி 10-ம் தேதிக்கு படக்குழு மாற்றியுள்ளது. பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ம் தேதி வெளியாக இருந்த ‘பராசக்தி’ படம் முன்கூட்டியே வெளியாகிறது.