’ஹாரர்’ படத்திற்கு இணைந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் - பிரசாந்த் நீல்
பிரசாந்த் நீலிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கீர்த்தன் நடகவுடா இந்த படத்தை இயக்குகிறார்.;
சென்னை,
இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ், பிரசாந்த் நீலுடன் இணைந்து ஒரு ’ஹாரர்’ படத்தைத் தயாரிக்கிறது. நேற்று இப்படம் பூஜையுடன் துவங்கியது.
நவீன் யெர்னேனி மற்றும் ரவிசங்கர் தயாரிக்கும் இந்த படத்தை பிரசாந்த் நீல் வழங்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் சூர்யா ராஜ், ஹனு ரெட்டி மற்றும் சமூக ஊடக பிரபலம் பிரீத்தி பகடாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பிரசாந்த் நீலிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கீர்த்தன் நடகவுடா இந்த படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.