தனுஷ் மேனேஜர் என்று சொல்லி என்னிடம்... பிரபல சீரியல் நடிகை பகீர் குற்றச்சாட்டு
சீரியல் நடிகை மன்யா ஆனந்தில் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது;
சென்னை,
பிரபல சீரியல் நடிகை மான்யா ஆனந்தின் சமீபத்திய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியளவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் தனுஷ். நடிப்பதுடன் மட்டுமல்லாமல் திரைப்படங்களை இயக்கவும் செய்கிறார்.
இந்த நிலையில், சீரியல் நடிகை மன்யா ஆனந்த் நேர்காணல் ஒன்றில், தனுஷ் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி கடந்த சில மாதங்கள் முன்பு தனக்கு ஒரு நபர் மெசேஜ் செய்ததாகவும் அவர் தன்னை தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் என்று அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தார். ஆனால் இதில் நடிக்க தனுஷுடன் 'அட்ஜஸ்ட்மெண்ட்' செய்ய வேண்டும் என்று அழுத்தம் தந்ததாகவும் மான்யா தெரிவித்தார்.
இது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் தற்போது நடித்துள்ள திரைப்படம் ’தேரே இஷ்க் மே’ இப்படம் வருகிற 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.