என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள்? - நடிகை கயாடு லோஹர் வேதனை

தன்னைப்பற்றிய தவறான செய்திகள் பரவி தனது தூக்கத்தையே கெடுத்துவிட்டதாக கயாடு லோஹர் கண் கலங்கி பேசியுள்ளார்.;

Update:2025-11-18 13:59 IST

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான 'முகில் பேட்டை' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் காயடு லோஹர். அதனை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தார். ஆனால் அவற்றில் எந்த படமும் எதிர்பார்த்த அளவில் வெற்றியடைவில்லை. இதற்கிடையில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'டிராகன்' படத்தில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானார். அந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நாயகியாக மாறிப்போன கயாடு லோஹர். தற்போது நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக 'இதயம் முரளி' படத்தில் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

மேலும் ஜீ.வி. பிரகாசுடன் 'இம்மார்டல்' என்ற படத்திலும், சிம்பு நடிக்கும் எஸ்.டி.ஆர் 49 என்ற படத்திலும் கயாடு லோஹர் இணைந்துள்ளார். அடுத்ததாக லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் இயக்கும் படத்தில் தனுசுடன் கயாடு லோஹர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில், தன்னைப்பற்றிய தவறான செய்திகள் பரவி வருவதாக நடிகை கயாடு லோஹர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் “சோஷியல் மீடியாக்களில் என்னைப் பற்றி பரவும் அவதூறு கருத்துகள் மிகவும் வேதனை அளிக்கிறது. ஒரு கண்ணியமான பின்னணியில் இருந்து வருபவள் நான், பின்னால் பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை என்றாலும், ஆழ் மனதில் அது உறுத்திக் கொண்டே இருக்கும்; எந்த தவறும் செய்யாமல் கனவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள்?” என்று கயாடு லோஹர் பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்