சம்யுக்தாவின் அடுத்த பட படப்பிடிப்பு நிறைவு...திரைக்கு வருவது எப்போது?

இப்படத்தில் சம்யுக்தா, சாக்சி வைத்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.;

Update:2025-12-24 16:07 IST

சென்னை,

கடந்த 1990-ம் ஆண்டு நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் "நரி நரி நடுமா முராரி". இது அவரது கெரியரில் மறக்கமுடியாத படங்களில் ஒன்று. 'எங்கேயும் எப்போதும்'பட நடிகர் ஷர்வானந்தின் 37வது படத்திற்கு "நரி நரி நடுமா முராரி" எனப்பெயரிடப்பட்டுள்ளது.

அனில் சுங்கராவின் ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ராமபிரம்மம் சுங்கரா தயாரிக்கும் இப்படத்தை சமாஜவரகமனா புகழ் ராம் அப்பாராஜு இயக்குகிறார். இதில் சம்யுக்தா மேனன், சாக்சி வைத்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படம் வருகிற ஜனவரி 14-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்