புராண கதையில் அல்லு அர்ஜுனின் அடுத்த படம்
அல்லு அர்ஜுன் இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாசன் இயக்கத்தில் புராண கதையில் நடிக்க உள்ளார்.;
சென்னை,
தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படம் ரூ. 1,800 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் பிரபலமானார். இவர் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் உருவாகும் சயின்ஸ் பிக்சன் படத்தில் நடிக்க உள்ளார்.
அதனை தொடர்ந்து, திரிவிக்ரம் சீனிவாசன் இயக்கத்தில் புராண கதையில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இப்படம் பிப்ரவரி 2027ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மிகுந்த உற்சாகத்தோடு இந்தப் படத்தை எதிர்பார்த்துள்ளனர்.
இயக்குனர் திரிவிக்ரம் மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் 4வது படம் இதுவாகும். இதற்கு முன் 'ஜூலாயி', ‘சன் ஆப் சத்தியமூர்த்தி', 'அலா வைகுந்தபுரமுலோ' என மூன்று வெற்றி படங்களை தந்த இக்கூட்டணி நான்காவது முறையாக இணைவது குறிப்பிடத்தக்கது.