’காந்தா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

இப்படத்தில் பாக்யஸ்ரீ , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.;

Update:2025-10-20 14:09 IST

சென்னை,

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் "காந்தா" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் 'மிஸ்டர் பச்சன்' திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இது மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கைக் கதையாக உருவாகியுள்ளது. இப்படம் கடந்த செப்டம்பர் மாதமே வெளியாக இருந்தது. ஆனால், அப்போது துலகர் சல்மான் தயாரித்த லோகா திரைப்படம் வெற்றி நடைபோட்டுக்கொண்டிருந்ததால் காந்தா படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு காந்தா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் நவம்பர் மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்