'ஓஜி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பவன் கல்யாணின் 'ஓஜி' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.;

Update:2025-05-25 18:48 IST

சென்னை,

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். 'அக்கட அம்மாயி இக்கட அப்பா' என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் இவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன. இவர் தற்போது, இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் 'ஓஜி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டி.வி.வி என்டர்டெயின்மென்ட்டின் கீழ் டி.வி.வி தனய்யா தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலைப் பாடி இருக்கிறார்

தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 'ஓஜி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 25-ந் தேதி வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்