2025-ல் நான் படித்த .புத்தகங்களின் எண்ணிக்கை... நடிகை மியா ஜார்ஜ்
பயணத்துக்குச் சென்றாலும் என்னுடன் ஒரு புத்தகம் இருக்கும் நடிகை மியா ஜார்ஜ் கூறியுள்ளார்.;
சென்னை,
தமிழ் மற்றும் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் மியா ஜார்ஜ். இவர் தமிழில் வெளிவந்த இன்று நேற்று நாளை படத்தின் மூலம் பிரபலமானார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு அஸ்வின் பிலிப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் தலவன் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது
இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் புத்தகங்கள் குறித்து அவர் கூறியதாவது:
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்புதான் படிப்பதில் தீவிர ஆர்வம் காட்டினேன். என்னுடைய நோக்கம் என்னவென்றால், ஸ்கிரீன் டைமிங்கை குறைக்கவும், வெட்டியாக நாள்களைப் போக்காமல் பயனுள்ளதாக மாற்ற அர்த்தமுள்ள நூல்களைப் படிக்க முடிவெடுத்தேன்.
தொடக்கத்தில் பீல் குட் புத்தகங்களைப் படித்தேன். பிறகு, எனக்கு பிடிக்கும் என்றே நினைக்காத சுய முன்னேற்றம் குறித்த புத்தங்களைப் படித்தேன். ஒவ்வொரு ஆண்டும் நான் புதிய புதிய புத்தகங்களை தேடித்தேடி வாங்கி படித்தேன். புத்தகங்களை அடுக்குவது பிடிக்கும். பயணத்துக்குச் சென்றாலும் என்னுடன் ஒரு புத்தகம் இருக்கும். புத்தகம் படிப்பது தற்போது தீவிரமான பழக்கமாகிவிட்டது. 2025-ல் மட்டும் 36 புத்தகங்கள் படித்தேன். ஒரு மாதத்திற்கு 3 புத்தகங்கள். தாமதமாக படிக்கும் பழக்கம் வந்த ஒருவருக்கு இது நல்ல முன்னேற்றம்தான் என அதில் பதிவிட்டுள்ளார்.