ரஜினியை சந்தித்த “படையப்பா ” படக்குழு

ரஜினியின் ‘படையப்பா’ திரைப்படம் ரீ-ரிலீஸில் 25வது நாளை கடந்து வெற்றி பெற்றது.;

Update:2026-01-06 18:56 IST

50 ஆண்டுகளாக, திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிக திரைகளில் ‘படையப்பா’ ரீ-ரிலீஸானது. சென்னையிலுள்ள சில திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து இப்படத்தைக் கொண்டாடினர்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சவுந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன் ஆகியோர் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம 'படையப்பா'. இந்த படம் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மாதம் 12ந் தேதி ரீ-ரிலீஸானது. 25 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடாகியும் வசூல் வெற்றியைப் பெற்று, இப்படம் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

நடிகை ரம்யா கிருஷ்ணன், படையப்பா படத்தை தியேட்டரில் பார்த்து கண்டு ரசித்தார். இந்தப் படத்தில் நீலாம்பரி எனும் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல திரைகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக இருப்பதால் ரீ-ரிலீஸிலும் நல்ல வசூலைக் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிபெற்ற பழைய திரைப்படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் போக்கு அதிகரித்தாலும் சில திரைப்படங்களே மீண்டும் வெற்றி பெறுகின்றன.‘படையப்பா’ படம் ரீ-ரிலீஸில் 25வது நாளை கடந்து ரீ-ரிலீஸில் ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

 

இந்நிலையில், ரஜினியை “படையப்பா ” படக்குழு சந்தித்தது. நடிகை ரம்யா கிருஷ்ணா, கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் ரஜினியை சந்தித்து பேசி மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்