பிரபாஸின் “ராஜா சாப்” படத்தில் 20 நிமிட காட்சிகள் குறைப்பு
பிரபாஸின் ‘ராஜாசாப்’ படம் வரும் 9ம் தேதி வெளியாக இருக்கிறது.;
பான் இந்தியா நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் அடுத்து திரைக்கு வர இருக்கும் படம் ‘தி ராஜாசாப்’. மாருதி இயக்கிய இந்த திகில் நகைச்சுவை படம் வரும் 9ம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது. பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாகவும், சஞ்சய் தத் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் புதிய அப்டேட்டாக படத்தின் நீளம் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக மூன்று மணி நேரத்திற்கு மேல் ஓடும் விதமாக இறுதி படத்தொகுப்பு செய்யப்பட்டிருந்தாலும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு கட்டத்தில் சோர்வு ஏற்படும் என பிரபாஸும் படத்தின் இயக்குனர் மாருதியும் உணர்ந்ததால் கிட்டத்தட்ட 20 நிமிட காட்சிகள் வரை குறைக்க முடிவுக்கு வந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.