பரோட்டா, சிக்கன் குருமா - படம் பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய ரசிகர்கள்
விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் 'தலைவன் தலைவி.;
சென்னை,
சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் விஜய் சேதுபதி நடித்த ''தலைவன் தலைவி'' திரைப்படம் பார்க்க வந்தவர்களுக்கு விஜய் சேதுபதி ரசிகர்கள் பரோட்டா, சிக்கன் குருமா வழங்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் 'தலைவன் தலைவி'. இது விஜய் சேதுபதியின் 52-வது படமாகும்.
விஜய் சேதுபதி - பாண்டிராஜ் இருவரும் முதல் முறையாக இணைந்ததால் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேற்ப 1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.