'ரெட்ரோ' படத்தின் டப்பிங் பணியை துவங்கிய பூஜா ஹெக்டே

’ரெட்ரோ’ படம் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-04-13 18:35 IST

சென்னை

தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, சூர்யாவுடன் 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் 'கனிமா' பாடல் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், 'ரெட்ரோ' படத்தின் டப்பிங் பணியை பூஜா ஹெக்டே துவங்கி இருக்கிறார். இதுமட்டுமில்லாமல் பூஜா ஹெக்டே, விஜய்யுடன் ஜனநாயகன் படத்திலும், ரஜினி நடிப்பில் உருவாகும் 'கூலி' படத்திலும் நடிக்கிறார்.

இந்தியில் வருண் தவானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதோடு ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4' படத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்