70 வருட பழைய புடவையில் பூஜா ஹெக்டே...புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சி

70 வருடங்கள் பழமை வாய்ந்த காஞ்சிபுரம் புடவையில் பூஜா ஹெக்டே புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.;

Update:2025-04-29 16:27 IST

சென்னை,

தமிழில் 'முகமூடி' படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்து கவனம் பெற்றார். தற்போது இவர் சூர்யாவுடன் 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற 1-ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

மேலும் விஜய்யுடன் 'ஜனநாயகன்' படத்திலும் நடித்து வருகிறார்.இந்நிலையில், 70 வருடங்கள் பழமை வாய்ந்த காஞ்சிபுரம் புடவையில் பூஜா ஹெக்டே புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புடவை அவரது பாட்டி திருமணத்தில் அணிந்திருந்ததாகவும் பாட்டியுடன் இருந்த நிகழ்வுகள் நினைவில் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் காலத்தின் பார்வையில் சின்ன விஷயங்களும் எவ்வளவு அழகாக இருக்கிறது எனவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்