'எனக்கு 3 கோடி பாலோவர்ஸ் உள்ளார்கள் அதற்காக...'- நடிகை பூஜா ஹெக்டே

ரெட்ரோ படத்தின் புரமோசனில் தற்போது பூஜா ஹெக்டே ஈடுபட்டுள்ளார்.;

Update:2025-04-16 19:40 IST

சென்னை,

தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, சூர்யாவுடன் 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் 'கனிமா' பாடல் இணையத்தில் வைரலானது.

இதுமட்டுமில்லாமல் பூஜா ஹெக்டே, விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் கதாநாயகியாகவும் , ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' படத்தில் சிறப்பு பாடல் ஒன்றிற்கு நடனமாடியும் இருக்கிறார். இதற்கிடையில், ரெட்ரோ படத்தின் புரமோசனில் தற்போது பூஜா ஹெக்டே ஈடுபட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், "எனக்கு இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 3 கோடி பாலோவர்ஸ் உள்ளார்கள். அதற்காக என் படத்திற்கு 3 கோடி டிக்கெட் விற்பனையாகும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது.

அதேபோல, 50 லட்சம் இன்ஸ்டா பாலோவர்ஸைக் கொண்ட பல சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் படங்களுக்கு அதிக கூட்டம் கூடும். சமூக ஊடகங்கள் உண்மையான உலகம் கிடையாது என்பதை நாம் ஆனைவரும் உணர வேண்டும்' என்றார்

Tags:    

மேலும் செய்திகள்