''கண்ணப்பா'' - பிரபாஸின் திரை நேரம் எவ்வளவு?

இத்திரைப்படம் வருகிற 27ம் தேதி வெளியாகவுள்ளது.;

Update:2025-06-24 06:48 IST

சென்னை,

கண்ணப்பா படத்தில் பிரபாஸின் திரை நேரம் எவ்வளவு என்பது பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி உருவாகி இருக்கும் படம் 'கண்ணப்பா' . இதில், விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், அக்சய் குமார், மோகன்லால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வருகிற 27ம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் பிரபாஸின் திரை நேரம் சுமார் 45 நிமிடங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்