ரஜினி - சுந்தர்.சி விவகாரம்: ரசிகரின் ஏடாகூட கேள்விக்கு, குஷ்புவின் ‘பளார்' பதில்

ரஜினியின் படத்தை இயக்கவிருந்த சுந்தர்.சி, அந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.;

Update:2025-11-15 06:41 IST

சென்னை,

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை சுந்தர் சி இயக்கப்போவதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் அந்த படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி நேற்று முன்தினம் இரவு அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

‘இந்த படம் எனக்கு பெரும் கனவாக இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக கனத்த இதயத்துடன் இதில் இருந்து விலகுகிறேன்' என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

Advertising
Advertising

சுந்தர் சி விலகலுக்கு பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் இதுகுறித்து ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

இதுதொடர்பான ஒரு விவாதத்தில் ‘ஒருவேளை படத்தில் குஷ்புவுடன் ஆடலாமா? என கேட்டிருப்பார்களோ...' என ஏடாகூடமான கேள்வியை ஒரு ரசிகர் கேட்டிருந்தார். அவருக்கு குஷ்பு தனது பாணியில் ‘பளார்' பதில் அளித்துள்ளார்.

அந்த பதிவில், ‘‘இல்ல... உங்க வீட்டுல இருந்து யாரையாவது ஆட வைக்கலாம்னு நினைச்சோம்'' என குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

குஷ்புவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்