சிங்கப்பூருக்கு வந்த ஹாலிவுட் நடிகையிடம் அத்துமீறிய ரசிகர் - போலீஸ் வழக்குப்பதிவு

சக நடிகர்கள் மற்றும் பாதுகாவலர்கள் சேர்ந்து அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.;

Update:2025-11-14 21:39 IST

சிங்கப்பூர்,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகியும், நடிகையுமான அரியானா கிராண்டே, உலக அளவில் புகழ்பெற்ற பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இவருக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘விக்கெட்’(Wicked) திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து, அந்த படத்தின் 2-ம் பாகம் ‘விக்கெட்: பார் குட்’(Wicked: For Good) வரும் 21-ந்தேதி வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு, படத்தின் புரமோஷன் பணிகளில் படகுழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சிங்கப்பூரில் இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதில் பங்கேற்பதற்காக அரியானா கிராண்டே உள்ளிட்ட படக்குழுவினர் வந்திருந்தனர்.

Advertising
Advertising

அப்போது ரசிகர் ஒருவர் தடுப்புகளை தாண்டிச் சென்று அரியானா கிராண்டேவை அத்துமீறி தொட முயன்றார். அந்த நபர் அரியானாவின் தோள்களில் கை வைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். திடீரென நடந்த இந்த சம்பவத்தால் அரியானா கிராண்டே செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்தார். உடனடியாக அருகில் இருந்த சக நடிகர்கள் மற்றும் பாதுகாவலர்கள் சேர்ந்து அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

பின்னர் அந்த நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இளைஞரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்