“டூரிஸ்ட் பேமிலி” பட இயக்குனர் படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்ட ரஜினி
அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது..;
சென்னை,
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்து வருகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்கியுள்ளார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இந்நிலையில், ‘வித் லவ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய படத்தின் டைட்டில் டீசரை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இப்படம் பிப்ரவரியில் வெளியாக உள்ளதாக படக்குழு டீசரில் அறிவித்துள்ளது.