ரத்னகுமாரின் “29” படத்தின் புரோமோ வெளியீடு

இயக்குநர் ரத்ன குமாரின் ‘29’ படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.;

Update:2026-01-03 16:05 IST

2017-ம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ரத்ன குமார். இதன்பின் இவர் 'ஆடை', 'குலுகுலு' போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார்.

இதனை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் ஜி-ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை ரத்னகுமார் இயக்கி வருகிறார். இதில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனாஷ், பிரேம்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படம் தொடர்பான எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில், சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது.

இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு நிகழ்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், “ ‘29’ எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான படம். `மேயாத மான்' தான் ஸ்டோன் பென்ச்-ன் முதல் படம். நிறைய படங்கள் செய்திருந்தாலும், முதல் அனுபவமாக `மேயாத மான்' மறக்க முடியாதது. ரத்னாவும் எங்களுக்கு முக்கியமான நபர். வெளியில் சில நேரம் அவர் பேசுவது பிடிக்காது, ஆனால் நம்ம வீட்டு பையன் தப்பு செய்தால் கூப்பிட்டு கண்டிப்பதை போல, `இதில் கவனமாக இருங்கள்' என சொல்வேன். இந்தக் கதையை அவர் பல வருடம் முன்பே என்னிடம் கூறினார். நாங்கள் ரத்னாவை தனுஷ் சாரிடம் அழைத்து சென்று கதை சொல்ல வைத்தோம். அவருக்கு கதை பிடித்திருந்தாலும், ஆக்ஷன் படங்கள் தொடர்ச்சியாக செய்யும் போது இதை நடித்தால் சரியாக இருக்காது என கூறி இளம் நடிகர் யாரையாவது நடிக்க வையுங்கள்” என்று தனுஷ் கூறியதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரத்னகுமாரின் ‘29’ படத்தின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்