’என்டிஆர்-நீல் பட இசை கேஜிஎப், சலார்போல இருக்காது’ : ரவி பஸ்ரூர்
இதில் காந்தாரா 2 படத்தில் நடித்துள்ள ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.;
சென்னை,
பிரபாஸுடன் 'சலார்' படத்திற்குப் பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ''என்டிஆர்நீல்'' படத்தை இயக்கி வருகிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் காந்தாரா 2 படத்தில் நடித்து வரும் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.
இந்நிலையில், ஒரு பேட்டியில், ரவி பஸ்ரூர் இப்படத்திற்கான தனது பணி குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், “என்டிஆர்-நீல் படம் இசை ரீதியாகவும், காட்சி ரீதியாகவும் பிரமாண்டமாக இருக்கும். கேஜிஎப் , சலார் படங்களிலிருந்து இப்படத்தின் இசை மிகவும் வித்தியாசமாக இருக்கும்’’ என்றார்.
சாலார் படத்திற்குப் பிறகு மீண்டும் பிரசாந்த் நீலுடன் இணைந்து பணியாற்றுவது வீடு திரும்புவது போல் உணர்வதாகவும் அவர் கூறினார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.