அகண்டா 2 படத்தின் 2-வது பாடல் வெளியீடு
இந்த திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் 3டி முறையில் வெளியாக உள்ளது.;
சென்னை,
நந்தமுரி பாலகிருஷ்ணாவின் ’அகண்டா 2’ திரைப்பட ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க, எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. போயபதி ஸ்ரீனு இயக்கி உள்ள இந்த திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் 3டி முறையில் வெளியாக உள்ளது.
இது எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடல் தாண்டவம் வெளியாகி இருந்தநிலையில், தற்போது 2-வது பாடல் ’ஜாஜிகாயா ஜாஜிகாயா' வெளியாகி இருக்கிறது. .
இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன், ஆதி பினிசெட்டி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ராம் அச்சந்தா மற்றும் கோபி அச்சந்தா இந்த படத்தை தயாரித்திருக்கின்றனர். தமன் இசையமைத்துள்ளார்.