ரவி தேஜாவுக்கு ஜோடியான பிரியா பவானி சங்கர்...டைட்டில் அறிவிப்பு

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.;

Update:2026-01-26 13:29 IST

சென்னை,

நடிகர் ரவி தேஜா தனது 77-வது படத்தை அறிவித்துள்ளார். இந்த முறை, அவர் ’மஜிலி’ படத்தின் மூலம் பெயர் பெற்ற இயக்குனர் சிவ நிர்வாணத்துடன் கைகோர்த்துள்ளார்.

இன்று ரவி தேஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு தயாரிப்பாளர்கள் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் ரவி தேஜா ஐயப்ப பக்தராக காட்சியளிக்கிறார். இப்படத்திற்கு ’இருமுடி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை பார்க்கும்போது இந்தப் படம் ரவி தேஜாவின் சமீபத்திய படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கும் என்று தெரிகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் படத்தை பற்றிய புதிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்