ஸ்ருதி ஷெட்டியின் “ஸ்கை”...கவனம் ஈர்க்கும் டிரெய்லர்
பிப்ரவரி 6-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.;
சென்னை,
முரளி கிருஷ்ணம் ராஜு, ஸ்ருதி ஷெட்டி, ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள “ஸ்கை” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வேலார் என்டர்டெயின்மென்ட் ஸ்டுடியோஸ் என்ற பதாகையின் கீழ் நாகிரெட்டி குண்டகா, ஸ்ரீலட்சுமி குண்டகா, முரளி கிருஷ்ணம் ராஜு மற்றும் பிரித்வி பெரிச்சர்லா ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.
பிரித்வி பெரிச்சர்லா இயக்கி உள்ள இந்த படத்திற்கு சிவ பிரசாத் இசையமைக்கிறார். பிப்ரவரி 6-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், “ஸ்கை” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. டிரெய்லர் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.