ஈஷா ரெப்பாவின் புதிய படம்...டிரெய்லரை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா
இப்படத்தில் தருண் பாஸ்கர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.;
சென்னை,
இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகர் என பன்முகத் திறன் கொண்ட தருண் பாஸ்கர், தற்போது ஒரு கிராமப்புற நகைச்சுவை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஈஷா ரெப்பா நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் ஏ.ஆர். சஜீவ் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்ருஜன் யாரபோலு, ஆதித்யா பிட்டி, விவேக் கிருஷ்ணானி, அனுப் சந்திரசேகரன், சாதிக் ஷேக் மற்றும் நவீன் சனிவரபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்திற்கு ''ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி'' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் வருகிற 30-ம் தேதி திரைக்கு வருகிறது. ஏற்கனவே வெளியிடப்பட்ட பாடல்கள் , டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லரை விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ளார். டிரெய்லரில் தருண் பாஸ்கர் மற்றும் ஈஷா ரெப்பா இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.