நஸ்லேன்-கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் அப்டேட்
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள ''லோகா'' படத்தில் துல்கர் சல்மான் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.;
திருவனந்தபுரம்,
துல்கர் சல்மான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் மூலம் அடுத்த படத்தை வெளியிட தயாராகி இருக்கிறார். இப்படத்திற்கு ''லோகா'' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதில், பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இது துல்கர் சல்மானின் வேபேரர் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகி வருகிறது. துல்கர் மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோர் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. இந்தநிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக துல்கர் சல்மான் அறிவித்துள்ளார்.